கல்வி

தமிழ் எழுத்தாளர்களின் படைப்பு நீக்கம் ஏன்? - டெல்லி பல்கலைக்கழகம் விளக்கம்

தமிழ் எழுத்தாளர்களின் படைப்பு நீக்கம் ஏன்? - டெல்லி பல்கலைக்கழகம் விளக்கம்

Sinekadhara

மொழி பாடப்பிரிவில் இடம்பெறக்கூடிய பாடத்திட்டம் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது என டெல்லி பல்கலைக்கழக நிர்வாகம் கூறியிருக்கிறது.

பாடத்திட்டத்திலிருந்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்பு நீக்கம் குறித்து டெல்லி பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்திருக்கிறது, அதில், தனி மனிதர், ஒரு சமூக அமைப்பின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் பாடத்திட்டம் இருக்கக் கூடாது எனவும், பாடத்திட்டம் ஒருதலைப்பட்சமாகவும் இருக்கக் கூடாது எனவும் டெல்லி பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கமளித்திருக்கிறது.

மேலும் பாடப்பிரிவுகளை நீக்கியதில் உள்நோக்கம் ஏதும் இல்லை எனவும், படைப்பாளிகளின் சாதி, மதம், மொழி பின்புலத்தை வைத்து டெல்லி பல்கலைக்கழகம் செயல்படுவதில்லை எனவும் விளக்கமளித்திருக்கிறது.

முன்னதாக, டெல்லி பல்கலைக் கழகத்தில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கம் செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் இருந்து பல்வேறு தரப்பினரும் கண்டன குரல்களை கொடுத்து வந்தனர். அந்த வரிசையில் திமுக எம்பியும் எழுத்தாளருமான தமிழ்ச்சி தங்க பாண்டியனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார்.