கல்வி

வினாத்தாளில் குஜராத் கலவரம் குறித்த கேள்வி இடம்பெற்றதால் சர்ச்சை - சிபிஎஸ்இ விளக்கம்

Veeramani

குஜராத் கலவரம் குறித்து இடம்பெற்ற கேள்வி முற்றிலும் பொருத்தமற்றது என்று சிபிஎஸ்இ கண்டனம் தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு முதல் பருவ பொதுத்தேர்வு சமூகவியல் பாடத்தில் குஜராத் கலவரம் குறித்து கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையானது. இது சிபிஎஸ்இ-இன் வழிகாட்டுதல்களுக்கு எதிரான கேள்வி என்றும், கேள்வித்தாளை தயாரித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிஎஸ்இ எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுத்தேர்வு வினாக்கள் கல்வி சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும், மதம் மற்றும் வகுப்புவாத நடுநிலைத்தன்மையுடன் கேள்விகள் அமைய வேண்டும் என்றும், சமூகம் மற்றும் அரசியல் விருப்பங்களுக்கேற்ப பொதுமக்களின் மனதை புண்படுத்தும் வகையில் வினாக்கள் அமையக்கூடாது என்றும் வினாத்தாள் தயாரிப்பாளர்களுக்கு சிபிஎஸ்இ அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.