தேர்வு முகநூல்
கல்வி

வெளியானது UPSC தேர்வுகள் குறித்த அறிவிப்பு... காலி பணியிடங்கள் எத்தனை? தேர்வு எப்போது?

பிப்ரவரி 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

PT WEB

ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 வகையான குடிமை பணிகளின் 979 காலியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை என்றும் மற்றவர்கள் 100 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நிலை தேர்வு வருகிற மே மாதம் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இது பற்றிய விவரங்களை upsc.gov.in என்ற இணையத்தில் அறிந்து கொள்ளலாம்.