கல்வி

சிபிஎஸ்இ சுற்றறிக்கைக்கு உயர்நீதிமன்றம் தடை

சிபிஎஸ்இ சுற்றறிக்கைக்கு உயர்நீதிமன்றம் தடை

webteam

தமிழகத்தில், தேசிய ஆசிரியர் கவுன்சில் பாட புத்தகங்களையே சிபிஎஸ்இ பள்ளிகள் வாங்க வேண்டும் என்று அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் நிர்வாகம் அனுப்பிய சுற்றறிக்கையில், தேசிய ஆசிரியர் கவுன்சில் பாட புத்தகங்களையே வாங்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. 2014ல் தனியார் பதிப்பாளர்களிடம் புத்தகங்கள் வாங்க அனுமதியளித்த சிபிஎஸ்இ நிர்வாகம் தற்போது தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் புத்தகங்களை மட்டுமே வாங்க உத்தரவிட்டுள்ளதாக பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி, சிபிஎஸ்இ நிர்வாகம் பிறப்பித்த சுற்றறிக்கைக்கு தடை விதித்தார். அடுத்த கல்வியாண்டு முதல் தனியார் பதிப்பக புத்தகங்களை வாங்கக் கூடாது என்றும், அவற்றின் தரம், விலை குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். தனியார் பதிப்பக புத்தகங்களை வாங்க 2014ம்ஆண்டு அனுமதி அளித்ததற்கும் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.