கல்வி

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

webteam

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி முதல், மார்ச் 29 ஆம் தேதி வரை நடந்தது. இதை 18 லட்சத்து 27 ஆயிரத்து 472 பேர் எழுதியுள்ளனர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகும் என்று செய்தி வெளியானது. அதை சிபிஎஸ்இ செய்தித் தொடர்பாளர் மறுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப் பட்டது. ஆனால் அதற்கு முன்பே தேர்வு முடிவு கள் வெளியானது. மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை, http://cbse.nic.in மற்றும் http://cbseresults.nic.in என்ற இணையதளங்களிலும் தெரிந்துகொள்ளலாம்.