கல்வி

சிபிஎஸ்இ பிளஸ் டூ முடிவுகளில் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி

PT WEB

சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில் மாணவர்களை விட, மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

சிபிஎஸ்இ பிளஸ் டூ முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மாணவர்களை விட மாணவிகள் 0.54 சதவிகிதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். 70 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் 95 சதவிகித மதிப்பெண்களை பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 99.37 சதவிகிதமாக உள்ள நிலையில், மாணவர்களை விட மாணவிகள் 0.54 சதவிகிதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 152 மாணவர்கள் 90 சதவிகிதத்துக்கும் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

65 ஆயிரம் மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை தயாரிக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், ஆகஸ்ட் 5 ஆம்தேதி இந்த முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பிளஸ்டூ தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மாற்று தேர்ச்சி முறை மூலம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.