கல்வி

இந்திய கடற்படையில் பயிற்சியுடன் பிடெக் படிப்பு: பிளஸ் டூ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

webteam

இந்திய கடற்படையில் படைப்பயிற்சி நுழைவுத்திட்டத்தின்கீழ் பயிற்சியுடன் கூடிய நான்கு ஆண்டு பிடெக் பட்டப்படிப்பில் சேர்வதற்கு விருப்பமும் தகுதியும் கொண்ட பிளஸ் டூ படித்த மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.

கல்வித்தகுதி


ஏதாவது ஒரு பாடத்திட்டத்தில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண்கள் அல்லது ஆங்கிலத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் (பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் டூ) பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பிடெக் பயிற்சியில் சேர விரும்புவோர் 2 ஜூலை 2001 மற்றும் 1 ஜனவரி 2004 தேதிகளுக்கு இடையில் பிறந்தவராக இருக்கவேண்டும். விண்ணப்பதாரர்கள் ஜேஇஇ மெயின் 2020 (பிஇ, பிடெக் படிப்பிற்காக) தேர்வை எழுதியிருக்கவேண்டும். விண்ணப்பதாரரின் முன்னுரிமை மற்றும் ஜேஇஇ தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் இந்திய தரவரிசை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் தகவல்களை இணையதளம் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் அக்டோபர் 6ம் தேதி முதல் விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 20. 10. 2020
விவரங்களுக்கு: www.joinindiannavy.gov.in