கல்வி

வேலை தேடுபவரா நீங்கள்..? உங்களுக்கான வாய்ப்பு இதோ..!

வேலை தேடுபவரா நீங்கள்..? உங்களுக்கான வாய்ப்பு இதோ..!

webteam

இந்திய அணுசக்தி கழகத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பயிற்சி

இந்திய அணுசக்தி கழகத்தில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பயிற்சியில் சேர விரும்புவோர் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், கெமிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், சிவில் பாடப்பிரிவுகளில் பி.இ/ பி.டெக் அல்லது பி.எஸ்.சி படித்திருக்க வேண்டும். கேட் 2017 அல்லது 2018 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படும். 26 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பணியிடங்கள் :200

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.4.2018.

தெற்கு ரயில்வேயில் அப்ரண்டீஸ் பயிற்சி

தமிழகத்தில் இயங்கி வரும் தெற்கு ரயில்வே நிறுவனத்தில் அப்ரஸ்டீஸ் பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். ஃபிட்டர், மெஷினிஸ்ட், டர்னர்,வெல்டர், எலெக்ட்ரீசியன், எலெக்ட்ரானிக் மெக்கானிக், பெயிண்டர்,கார்பெண்டர், டீசல் மெக்கானிக்,பிளம்பர், வயர்மேன், ஏ.சி மெக்கானிக், டிராஃப்ட்ஸ்மேன் பாடப்பிரிவுகளில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும். 15 லிருந்து 24 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பணியிடங்கள் : 2652

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.4.2018.

விவரங்களுக்கு: www.sr.indianrailways.gov.in