கல்வி

வேலை தேடுபவரா நீங்கள்..? உங்களுக்கான வாய்ப்புகள் இதோ..!

வேலை தேடுபவரா நீங்கள்..? உங்களுக்கான வாய்ப்புகள் இதோ..!

webteam

இந்தோ திபத்திய எல்லை பாதுகாப்புப் படையில் 134 கான்ஸ்டெபிள் வேலை

இந்தோ திபத்திய எல்லை பாதுகாப்புப் படையில் கான்ஸ்டெபிள் பணியில் சேர விரும்புவோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் LMV/ Medium/ Heavy மோட்டார் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும். 27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.3.2018

இஸ்ரோவில் சயிண்டிஸ்ட்/ என்ஜினீயர் வேலை

இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் கழகத்தில் சயிண்டிஸ்ட் அல்லது என்ஜினீயர் (SC) பணியில் சேர விரும்புவோர் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ/ பி.டெக் படித்திருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

காலியிடங்கள்: 106 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.2.2018

விவரங்களுக்கு: https://www.isro.gov.in/careers

பால்மர் லாவ்ரி ஃபீல்டு எக்சிக்யூட்டிவ் வேலை

பால்மர் லாவ்ரி நிறுவனத்தில் ஃபீல்டு எக்சிக்யூட்டிவ் பணியில் சேர விரும்புவோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 14 லிருந்து 21 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.2.2018

விவரங்களுக்கு: http://balmerlawrie.com/pages/currentopening

கொச்சின் கெமிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் 39 காலியிடங்கள்

கொச்சின் கெமிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் ஆப்ரேட்டர், ஃபிட்டர், ஹெல்பர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கெமிக்கல், மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிப்ளமோ அல்லது ஃபிட்டர், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.2.2018

விவரங்களுக்கு: http://tcckerala.com/UserFiles/tcc/file/Notification%20v1.pdf