கல்வி

பொறியியல் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் இறுதி வாய்ப்பு

பொறியியல் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் இறுதி வாய்ப்பு

webteam

பொறியியல் படிப்பை முடிக்காமல் நிலுவைத் தேர்வுகளை வைத்துள்ளவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் இறுதி வாய்ப்பு அளித்துள்ளது.

பொறியியல் படிப்பை முடிக்காமல் இருக்கும் முன்னாள் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வாய்ப்பளித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் 2001ல் சேர்ந்த மாணவர்கள் 3வது பருவத்தேர்வு மற்றும் முதலாவது தேர்வு எழுதுவதற்கு அனுமதி வழங்கப்படுவதாகவும், 2002ல் சேர்ந்த மாணவர்களுக்கும் முதலாவது பருவத்தேர்வு மற்றும் முதல் தேர்வு எழுதுவதற்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.annauniv.edu, coe1.annauniv.edu-ல் அறிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது படிப்பை முடிக்காமல் இருக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பு என்றும், இனிமேல் கூடுதல் அவகாசம் இல்லை என்றும் அண்ணா பல்கலைக்கழகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.