கல்வி

அண்ணாப்பல்கலைக்கழக தேர்வு முறையில் சீர்திருத்தம்!

webteam

அண்ணாபல்கலைக்கழக தேர்வு நடத்தும் முறைகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்வுத்தாள்களைத் திருத்த ‌அனுபவமிக்க கல்லூரி ஆசிரியர்கள் ப‌ணி அமர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.‌ தேர்வுத்தாள்கள் ஒரே மையத்தில் மதிப்பீடு செய்யு‌ம் போது, 10 தேர்வாளர்களுக்கு ஓரு மதிப்பீட்டு குழுத்தத‌லைவ‌ர் ‌பணி அமர்த்தப்படுவதா‌கவும் கூறப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட தேர்வுத்தாள்களை சரிபார்க்கும் பொறுப்பு ஒவ்வொரு பாடத்திலும் போதிய அனுபவம் பெற்ற ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு சீர்திருத்தங்களால் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் தேர்வுத்தாள்களின் எண்ணிக்கை, கடந்த நவம்பர், டிசம்பர் மாத தேர்வில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விதிகளில் உள்ள கால அவகாசத்திற்குள் தேர்வுகளை முடிக்காதவர்களுக்கு, மனிதாபமான அடிப்படையில் நிலுவைத்தேர்வுகளை எழுத அனுமதி தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பை முடிக்க இயலாது எனக் கருதிய மாணவர்களுக்கு, பட்டம் பெற முடியும் என்ற நம்பிக்கையை தேர்வு சீர்திருத்தம் அளித்திருப்பதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.