கல்வி

சியுஇடி நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மத்திய பல்கலைகளில் சேர்க்கை - யுஜிசி

Veeramani

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் யுஜிசி அறிவித்துள்ளது.

CUET நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என யுஜிசி தலைவர் ஜெகதீஸ் குமார் தெரிவித்துள்ளார். +2 மதிப்பெண்கள் வெயிட்டேஜ் முறையில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.



இதன் மூலம், நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு சம வாய்ப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கல்விமுறையின் சுமையையும் குறைக்கும் என யுஜிசி தலைவர் ஜெகதீஸ் குமார் விளக்கம் அளித்துள்ளார். CUET நுழைவுத்தேர்வு 13 மொழிகளில் நடத்தப்படவுள்ளது.