கல்வி

தனியாா் பள்ளிகளில் இலவச மாணவர் சோ்க்கை: நாளை முதல் விண்ணப்பம் தொடக்கம்

webteam

தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டின்படி, தனியாா் பள்ளிகளில் இலவசமாக ஏழை எளிய குழந்தைகள் சேர்க்கப்படுவர். அதில் எஞ்சியுள்ள 55 ஆயிரம் இடங்களுக்கு நாளை முதல் (அக்டோபர் 12) விண்ணப்பிக்கலாம் என தனியாா் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.

கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி, சிறுபான்மை அல்லாத தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவா்கள் எட்டாம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

அதாவது, 8,608 தனியாா் பள்ளிகளில் ஒரு லட்சத்து 15,771 இடங்கள் உள்ளன. அதற்கு 86,318 மாணவா்கள் விண்ணப்பித்தனா். அதில் 60 ஆயிரம் பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. தற்போது மீதமுள்ள இடங்களை நிரப்புவதற்கு இரண்டாம் கட்ட மாணவர் சோ்க்கை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 12 ஆம் தேதி முதல் நவம்பர் 7 ஆம் தேதி வரை இணையதளம் வழியாக பெற்றோர்கள் விண்ணப்பம் செய்யலாம். ஏற்கெனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.