கல்வி

டிச.31க்குள் மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம்!

டிச.31க்குள் மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம்!

webteam

டிசம்பர் 31ம் தேதிக்குள் தொடக்கக் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும், ஆதார் புகைப்பட அடையாள அட்டை எடுத்திருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் கார்மேகம் பிறபித்துள்ள உத்தரவில், ஆதார் அட்டை எடுக்காத மாணவர்களுக்கு ஆதார் எடுப்பதற்கான பணிகளை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் விரைந்து முடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஆதார் அட்டை எடுக்க மானவர்களை ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு அழைத்துச் செல்வதாக இருந்தால், பெற்றோர்கள் அனுமதியுடன் ஆசிரியர்கள் அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.