பிளஸ் 2 பொதுத் தேர்வில் 91.1 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றிருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
2017-2018-ம் ஆண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற்றது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழகத்தில் 74 மையங்களில் நடைபெற்றது. இப்பணி நிறைவுபெற்றதையடுத்து மாணவர்களின் மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றும் பணி நடைபெற்றது. தொடர்ந்து அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றது.
இந்நிலையில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 91.1 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றிருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சுமார் 9 மணியளவில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் 94.1 சதவீத மாணவிகளும், 87.7 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளார்.