காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில் பன்னாட்டு கருத்தரங்கு தொடங்கியது.
காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தில் 2ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்பாடு செய்யப்படும் பன்னாட்டு கருத்தரங்கு 4ஆவது முறையாக நடைபெறுகிறது. நுண் அறிவியல் மற்றும் நுண் தொழில்நுட்பவியல் துறை சார்ந்த வளர்ச்சிகள், கண்டுப்பிடிப்புகள் குறித்து இந்த கருத்தரங்கில் பேசப்படுகிறது. நியூசிலாந்து, தைவான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தும் கருத்தரங்கு 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.
எஸ்.ஆர்.எம் குழும நிறுவனர் பாரிவேந்தர் இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து, தலைமை உரையாற்றினார். தைவான் தேசிய சியோ துங் பல்கலைக்கழக மூத்த துணைத்தலைவர் முனைவர் எட்வர்டு யிசாங்கு, சிஎஸ்ஐஆர் இயற்பியல் ஆய்வக இயக்குநர் முனைவர் அஸ்வல், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ந.சேதுராமன் மற்றும் கல்வியாளர்கள் பலர் இதில் கலந்துக்கொண்டனர்.