மாணவி நந்தினி
மாணவி நந்தினி PT Tesk
கல்வி

12-ம் வகுப்பில் 546 மதிப்பெண்கள் எடுத்தும் கூலி வேலைக்கு செல்லும் நிலை? பரிதவிக்கும் மதுரை மாணவி!

PT WEB

12ஆம் வகுப்பில் 600-க்கு 546 மதிப்பெண்கள் எடுத்த ஏழை மாணவியொருவர், கூலி தொழில் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள சாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுமை தூக்கும் கூலி தொழிலாளிதான், வேல்முருகன் என்பவர். இவரது மகள் நந்தினி.

அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி நந்தினி, 600-க்கு 546 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் நேரத்தில் நந்தினிக்கு அம்மை நோய் தாக்கியுள்ளது. பெற்றோருக்கும் கல்வி விழிப்புணர்வு இல்லாததால் கல்லூரிக்கு விண்ணப்பிப்பது தாமதமானது.

இறுதி கட்டத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பித்ததால் மதுரை அரசு மீனாட்சி கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. ஆனால் கல்லூரி கட்டணத்தை இணையதளம் வாயிலாக செலுத்தும்போது, இணையதள கோளாறால் கட்டணம் செலுத்த முடியாமல் தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. இதனால், அரசு கல்லூரியில் சேரும் வாய்ப்பு பறிபோனதால், மாணவி நந்தினி வேதனை அடைந்துள்ளார்.

இந்நிலையால், எதிர்காலத்தில் முதல்நிலை பட்டதாரியாக ஆகியிருக்க வேண்டிய மாணவி நந்தினி, இப்போது கூலி வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக வேதனை தெரிவிக்கிறார். மாணவியின் எதிர்கால கனவு என்ன என்பதுபற்றி அவர் கூறுவதை, இந்த வீடியோவில் பார்க்கலாம்..