கல்வி

11 ஆம் வகுப்புக்கான மாதிரி வினாத்தாள் இன்று வெளியீடு

11 ஆம் வகுப்புக்கான மாதிரி வினாத்தாள் இன்று வெளியீடு

webteam

மாணவர்களின் குழப்பத்தைப் போக்கும் வகையில், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் இன்று வெளியிடப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பல்வேறு பொதுத்தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் 450 பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்றும், சனிக்கிழமைதோறும் 3 மணிநேரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

மேலும், மாணவர்களின் குழப்பத்தை போக்கும் வகையில், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் இன்று வெளியிடப்படும் என தெரிவித்தார்.