தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.
இதுகுறித்து தமிழக அரசின் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் “பள்ளிகளில் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். மதிப்பெண் சார்ந்த குறைகள் இருப்பின் வரும் 17ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரையில் மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்” என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
பொதுமுடக்கம் காரணமாக 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில், மதிப்பெண்கள் வெளியிடப்பட உள்ளன.