கல்வி

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 100 சதவீத தேர்ச்சி

webteam

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வுக்கு பதிவு செய்திருந்த 9,39,829 மாணாக்கர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் 100% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4,71,759 மாணவர்களும் 4,68,070 மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வு எழுத பதிவு செய்த பள்ளிகளின் எண்ணிக்கை 12,690. இவற்றில் மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7,368. உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 5,322. மாற்றுத்திறனாளி மாணாக்கர்களின் மொத்த எண்ணிக்கை 6,235.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாக்குமரி - 23871
திருநெல்வேலி - 43287
தூத்துக்குடி - 22855
ராமநாதபுரம் - 16517
சிவகங்கை - 18148
விருதுநகர் - 26044
தேனி - 16040
மதுரை - 39995
திண்டுக்கல் - 25588
ஊட்டி - 7768
திருப்பூர் - 29502
கோயம்புத்தூர் - 40422
ஈரோடு - 25782
சேலம் - 44858
நாமக்கல் - 21225
கிருஷ்ணகிரி - 26719
தருமபுரி - 22702
புதுக்கோட்டை - 22467
கரூர் - 12185
அரியலூர் - 10232
பெரம்பலூர் - 8587
திருச்சி - 35539
நாகப்பட்டினம் - 19666
திருவாரூர் - 15155
தஞ்சாவூர் - 31628
விழுப்புரம் - 46494
கடலூர் - 35113
திருவண்ணாமலை - 33113
வேலூர் - 50916
காஞ்சிபுரம் - 52741
திருவள்ளூர் - 48950
சென்னை - 49235
காரைக்கால் - 2609
புதுச்சேரி - 13876