10,11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இந்தாண்டு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிலுவையில் உள்ள 12-ஆம் வகுப்பு தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
இதனிடையே காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும் மற்றும் வருகைப் பதிவை பொருத்து 20 சதவீத மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அனைத்து மாணவ- மாணவிகளும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாகவும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.