கல்வி

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 95.2 சதவிகிதம் பேர் தேர்ச்சி

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 95.2 சதவிகிதம் பேர் தேர்ச்சி

webteam

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் 95.2 சதவிகிதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆயிரத்து 546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ- மாணவிகள் மற்றும் 38 ஆயிரம் தனித் தேர்வர்கள் எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. இதில் 95.2 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.3 சதவிகித பேரும் மாணவிகள் 97 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தேர்வு முடிவுகள் மாணவர்கள் ஏற்கனவே வழங்கிய கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக  அனுப்பட்டுள்ளது. மேலும், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற இணையதளங்கள் மூலமும் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். 

மாவட்ட வாரியாக ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தகவல் மையங்களிலும் அனைத்து நூலகங்களிலும் மாணவர்கள் படித்த அந்தந்த பள்ளிகளிலும் மதிப்பெண்களை தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது