கல்வி

’யுபிஎஸ்சி தேர்வு தவறவிட்டவர்களுக்கு மறு வாய்ப்பு இல்லை’ – உச்ச நீதிமன்றம்

sharpana

கொரோனா கட்டுப்பாடுகளால் யுபிஎஸ்சி தேர்வை தவறவிட்டவர்களுக்கு மறுவாய்ப்பை வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா பொதுமுடக்கத்தால் ஒத்திவைக்கப்பட்டிருந்த யுபிஎஸ்சி தேர்வுகள் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றன. கொரோனா கட்டுப்பாடுகளால் இந்த தேர்வை எழுத முடியாமல் தவற விட்டவர்கள், தங்களுக்கு மறுவாய்ப்பு வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கட்டுப்பாடுகள் காரணமாக கடைசி வாய்ப்பை இழந்தவர்களுக்கு ஏன் மறுவாய்ப்பு வழங்கக்கூடாது என கேள்வி எழுப்பியிருந்தது.

கடைசி வாய்ப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என மத்திய அரசு சார்பிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், யுபிஎஸ்சி தேர்வில் வாய்ப்பை தவற விட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க முடியாது என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்தது.