திருக்கோவிலூர் அருகே தற்கொலை செய்வதாக வீடியோ அனுப்பியுள்ள இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் பில்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருக்கும் இவரது மனைவி கலையரசிக்கும் கடந்த சில நாட்களாக குடும்பத் தகராறு இருந்திருக்கிறது. இந்தநிலையில் இன்று காலை 10.30 மணிக்கு ஏழுமலை அவரது நண்பருக்கு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். வீடியோவில் தான் காட்டுப்பகுதியில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறியுள்ளதுடன், காது மற்றும் வாயில் இரத்தம் வழிவது போன்ற காட்சிகளையும் ஏழுமலை அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காணவில்லை என வழக்கு பதிவு செய்துள்ள அரகண்டநல்லூர் போலீசார் ஏழுமலையை தீவிரமாக தேடி வருகின்றனர்.
எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல என்பதை இளைஞர்கள் என்றுதான் உணரப் போகிறார்களோ..?