குற்றம்

துண்டு துண்டாக வெட்டி இளைஞர் கொலை: நண்பர் கைது

துண்டு துண்டாக வெட்டி இளைஞர் கொலை: நண்பர் கைது

webteam

சென்னை அருகேயுள்ள மேற்கு முகப்பேரில் பாபு என்பவர் தலை, கை,கால்கள் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை நொளம்பூரில் கடந்த 26ஆம் தேதி மழைநீர் கால்வாயிலிருந்து தலை, கை, கால்கள் இல்லாத உடல் கண்டெடுக்கப்பட்டது. அடுத்தநாளே குடியிருப்பு பகுதியிலிருந்து கால் ஒன்று மீட்கப்பட்டது. இந்த கொலை குறித்து நொளம்பூர் காவல்துறையினர் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தியதில், அதே பகுதியில் தையல் கடையில் பணியாற்றி வந்த பாபு என்பவர் காணவில்லை என்பது தெரியவந்தது. அவரும், கறிக்கடையில் பணியாற்றும் முகமது ரசூல் என்பவரும் நண்பர்கள் என்றும், இருவரும் ஒன்றாக மது அருந்துவார்கள் என்பது தெரியவந்துள்ளது. 

முகமது ரசூலிடம் விசாரித்ததில், குடிபோதையில் பாபுவை கொலை செய்து உடல்பாகங்களை வெட்டி வீசியதை அவர் ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னை பல்லாவரத்தில் முகமதுவை கைது செய்த காவல்துறையினர் பாபுவின், தலை மற்றும் கைகள், கால்களை மீட்டனர்.