குற்றம்

கல்லூரி மாணவியைக் கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

கல்லூரி மாணவியைக் கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

webteam

போச்சம்பள்ளி அருகே கல்லூரி மாணவியைக் கடத்தியதாக இளைஞர் ஒருவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் தருமத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வீரமணி. இவரது மகள் கல்லூரியில் படித்து வருகிறார். இதே கிராமத்தைச் சேர்ந்த ரஞ்ஜித் (21) என்பவர் கல்லூரி மாணவியான வீரமணியின் மகளை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த மாதம் கல்லூரி மாணவி திடீரென மாயமானார். பின் அவரது தந்தை மத்தூர் காவல்நிலையத்தில் மகளை கடத்திவிட்டதாக புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரஞ்சித்தின் நண்பர் அம்பேத்குமார் (22) என்பவரை கைது செய்தனர். மேலும் ரஞ்ஜித் மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதனிடையே நீதிமன்றத்தில் சரனடைந்த ரஞ்சித்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மேலும் மூவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று செம்பருத்தி (21), உதயகுமார் (24) மற்றும் விக்னேஷ் (23) ஆகிய மூவரையும் மத்தூர் போலீசார் தேடிப்பிடுத்து 366 பிரிவின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட ரஞ்சித்தின் வழக்கை போக்சோ சட்டத்தின் கீழ் மாற்றியமைத்துள்ளனர். இதனால் மத்தூர் காவல்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.