அம்பத்தூர் பகுதியில் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அம்பத்தூர் பகுதியில் ஒரு ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் பெண்களின் படங்கள் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுதோடு சம்பந்தப்பட்ட பெண்களின் தொலைபேசி எண்களும் பகிரப்பட்டதாக புகார் எழுந்தது. இதனைக் கேட்டறிந்த சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் தனிப்படை அமைத்து சம்பந்ததப்பட்ட நபரை கைது செய்ய உத்தரவிட்டார். அதன் படி விசாரணையைத் தொடங்கிய அம்பத்தூர் காவல் ஆய்வாளர், மகா தேவன் என்ற பொறியியல் பட்டதாரியை கைது விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணையில் அவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததும், சம்பந்தப்பட்ட பெண் காதலிக்க மறுத்ததால் அவரை பழிவாங்கும் நோக்கில் அவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.