திருத்துறைப்பூண்டியில் 13 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற லட்சுமணன் என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவிற்கு உட்பட்ட உப்பூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில்குமார் - இந்திரா தம்பதியினர். இவர்களுக்கு 13 வயதில் ஒரு பெண் குழந்தையும் 7 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் அவர்களது வீட்டின் அருகே வசிக்கும் லட்சுமணன் என்பவர் 13 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற லட்சுமணனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.