kovai NGMPC22 - 158
குற்றம்

கோவை | 9 மாதங்களாக 3 வீட்டில் குடித்தனம்.. திருமணம் என்றதும் காதலன் ஓட்டம்

9 மாதங்களாக 3 வீட்டில் குடித்தனம்.. திருமணம் என்றதும் காதலன் ஓட்டம்.. சம்பவம் செய்த காதலி .. கோவையில் பரபரப்பு சம்பவம்

Uvaram P

கோவையில் திருமணம் செய்துகொள்வதாக கூறி 9 மாதங்களுக்கு living together-ல் இருந்த காதலன் ஏமாற்றிவிட்டு ஓடியதாக, நடுரோட்டில் வைத்து காதலி தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. காவலர்கள் பணியில் இருந்தபோது, அவர்கள் முன்னிலையிலேயே சண்டையிட்ட பெண், முகத்திலேயே குத்திய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இளம் பெண் ஒருவர், இளைஞர் ஒருவரை துரத்திக்கொண்டு ஓடியுள்ளார். பெண்ணின் பின்னால் மற்றொரு இளைஞரும் ஓடிவரவே, அதனைப் பார்த்த காவல்துறை அதிகாரி ஒருவர், இளம்பெண்ணையும், அவர் பின்னால் ஓடி வந்த இளைஞரையும் அழைத்து விசாரித்துள்ளார்.

அப்போது, தானும் திருப்பூர் அவிநாசிபாளையத்தைச் சேர்ந்த இளைஞரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாகவும், காதலன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி, கடந்த 9 மாதமாக மூன்று வீடுகளில் குடிவைத்து ஒன்றாக சேர்ந்து வாழ்ந்ததாகவும் கூறியவர், திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டதற்கு, மறுப்பு தெரிவித்த காதலன் தப்பி ஓடியதாகவும் தெரிவித்துள்ளார்.

அப்போது, பெண்ணின் பின்னால் ஓடி வந்த இளைஞரை விசாரிக்கையில், அவர் ஓட்டம் பிடித்த காதலனின் நண்பர் என்று தெரியவர, அவரை வைத்தே ஃபோன் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிக்கு போலீஸார் வரவழைத்தனர். காவலர்கள் அழைத்ததன் பேரின் அங்கு வந்த வாலிபருடன், இளம்பெண் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, திருமணம் செய்துகொள்ள வேண்டுமானால் பெற்றவர்களிடம் பேச வேண்டும் என்று கூற, 9 மாதங்களாக திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தியபோது மட்டும் இனித்ததா? என்று முகத்திலேயே குத்துவிட்டார் காதலி. தொடர்ந்து, அவரை தடுத்த காவல்துறையினர் இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.