குற்றம்

கல்லூரி மாணவியை கடத்தி திருமணம்: இளைஞர் கைது

கல்லூரி மாணவியை கடத்தி திருமணம்: இளைஞர் கைது

Rasus

கல்லூரி மாணவியை கடத்தி திருமணம் செய்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்தவர் சுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 17. தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார். இதனிடையே தனது மகள் சுதாவை ராஜபாண்டியன் என்பவர் கடத்திவிட்டதாக சுதாவின் தந்தை தங்கராஜ் சங்கர்நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ராஜபாண்டியின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ராஜபாண்டி தேனியில் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து தேனி போலீசார் உதவியுடன் சுதா மீட்கப்பட்டார். அப்போது தேனியில் வைத்து சுதாவை ராஜபாண்டியன் திருமணம் செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து கல்லூரி மாணவியை கடத்தி திருமணம் செய்ததாக ராஜபாண்டியன் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தகவல்கள்: சாந்தகுமார், செய்தியாளர்.