குற்றம்

பழனியில் கேரள பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை? போலீஸ் விசாரணை

jagadeesh

பழனியில் கேரள பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்துள்ள தமிழக காவல்துறையினர், விசாரணைக்காக கேரளா விரைந்துள்ளனர்.

கேரளாவை சேர்ந்த பெண், கடந்த 19-ஆம் தேதி பழனி முருகன் கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது, தான் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கேரளா மாநிலம் கண்ணூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக கேரளா காவல்துறையும், தமிழக காவல்துறைக்கு கடிதம் எழுதியது.

இதனை அடுத்து பழனி காவல்துறை‌யினர் கடத்தல் மற்றும் கூட்டுப்பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை‌ மேற்கொண்டுள்ளனர். மாவட்ட எஸ்பியும் சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடங்களில் நேரில் விசாரணை செய்தார்.

இது தொடர்பாக பெண் ஆய்வாளர் தலைமையில் 3 விசாரணை குழுக்களும் அமைக்கப்பட்டன. இந்நிலையில் மேற்கொண்டு விசாரணை நடத்த ஏடிஎஸ்பி சந்திரன் தலைமையிலான இரண்டு தனிப்படை குழுக்கள் கேரளா விரைந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் மற்றும் கணவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.