குற்றம்

கணவர் கண்முன்னே இளம்பெண் பாலியல் வன்கொடுமை

கணவர் கண்முன்னே இளம்பெண் பாலியல் வன்கொடுமை

webteam

கணவர் மற்றும் மைத்துனர் கண் முன்னால், துப்பாக்கி முனையில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி அருகேயுள்ள குருகிராம் பகுதியை சேர்ந்தவர் சுமா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 22. இவர் தனது கணவர், அவரது தம்பி ஆகியருடன் காரில், உறவினர் வீட்டு விழாவுக்குச் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். செக்டார் 56 அருகே வந்தபோது, சிறுநீர் கழிப்பதற்காக காரை நிறுத்தினர் கணவர். அப்போது அங்கு இரண்டு கார்கள் வேகமாக வந்து நின்றன.

அதில் இருந்து இறங்கிய நான்கு பேர், ’இங்கு ஏன் காரை நிறுத்தினீர்கள்’ என்று அவர்களிடம் வாக்கு வாதம் செய்தனர். அவர்கள் அனைவரும் மதுபோதையில் இருந்தனர். பின்னர் அந்த நான்கு பேரில் ஒருவர், கணவரையும் மைத்துனரையும் தாக்கிவிட்டு, சுமாவை காரில் இருந்து வெளியே இழுத்து துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர். பின்னர் ’இதுபற்றி போலீசில் சொன்னால் கொன்றுவிடுவோம்’ என்று மிரட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். 

அவர்கள் கார் நம்பரை வைத்து குருகிராம் போலீசில் புகார் செய்தார் கணவர். இதையடுத்து போலீசார், குருகிராம் அருகிலுள்ள ஜோகல்கா கிராமத்தைச் சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளனர். 

டெல்லி மற்றும் அதன் அருகே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துவருகிறது.