குற்றம்

லிப்ட் கொடுத்து இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

webteam

காரில் லிப்ட் கொடுத்து இளம் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநிலங்களில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தினமும் ஏதாவது ஒரு பாலியல் வன்கொடு மை வழக்குப் பதியப்படுகிறது. இதனால் அங்கு பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இடாவில் நடந்துள்ள பாலியல் வன்கொடுமை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள  பிலியுவா கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண், மார்க்கெட்டுக்கு சென்றுவிட்டு தனது வீட்டுக்குப் போக பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று அவர் அருகில் வந்து நின்றது. காருக்குள், அந்த இளம் பெண்ணின் தூரத்து உறவினர் ஒருவர் இருந்தார்.  ’ நான் வீட்டுக்குத்தான் போறேன். வாங்க டிராப் பண்றேன்’ என்றார் அந்தப் பெண்ணிடம். உறவினர்தானே என்று நம்பி காரில் ஏறினார். உள்ளே உறவினரோடு சேர்த்து நான்கு பேர் இருந்தனர். கார் செல் லத் தொடங்கியது. ஆனால், அவர் வீட்டுப் பகுதிக்குப் போகாமல் வேறு இடத்துக்குச் சென்றது கார். 

இதையடுத்து காருக்குள்ளேயே அந்தப் பெண்ணை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர். சத்தம் போட்ட அந்தப் பெண்ணை அடித்து உதைத்தனர். பின்னர் காரில் இருந்து தள்ளிவிட்டு விட்டுச் சென்றனர். இந்தச் சம்பவம் கடந்த 1-ம் தேதி நடந்தது. ஆனால், போலீசார் இப்போது தான் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாலியல் வன்கொடுமை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதே மாவட்டத்தில் சமீபத்தில்தான் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்துக் கொல்லப்பட்டார். இப்போது அடுத்த பாலியல் வன்கொ டுமை சம்பவம் நடந்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தை பொருத்தவரை அங்கு பதிவாகும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் , நாட்டில் நடக்கும் சம்பவங்களில் 13 % ஆக இருக்கிறது. அதோடு ஒட்டுமொத்தமாக பதிவாகும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பெரும்பாலும் உறவினர்களோ, தெரிந்தவர்களோ, நம்பிக்கைக்குரியவர்களோ ஈடுபடுவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக பதிவுகள் தெரிவிகிறது. 

கடந்த 2016-ம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் மட்டும் சுமார் 2467 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.