குற்றம்

சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்: பெண் கைது

சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்: பெண் கைது

webteam

சிறுவர்களிடம் தகாது உறவு கொள்ளும் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரபிரதேசத்தில் டியூஷனுக்கு சென்ற பத்தாம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை தகாத உறவில் ஈடுபட்டார். மாணவனை வீட்டுக்குள் வைத்துப் பூட்டிய ஆசிரியை பின் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அதே போன்ற சம்பவம் விஜயவாடாவில் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜயவாடாவில் உள்ள வேம்பே காலனியை சேர்ந்த 14 வயது சிறுவன் தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அவனை ஊருக்குத் திரும்புமாறு கூறினர். ஆனால் அவர் வரமறுத்துவிட்டான். பிறகு அவனிடம் விசாரித்தபோது, அந்த அதிர்ச்சி சம்பவத்தைச் சொன்னான். வீட்டுக்கு எதிரில் வசிக்கும் 45 வயது பெண், சிறுவனை அடிக்கடி வீட்டுக்கு அழைத்துள்ளார். அவருக்கு கணவர் இல்லை. இரண்டு மகள்  களையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டதால் தனியாக இருக்கிறார்.

தேவைப்படும்போது சிறுவனை அழைத்து அவனுடன் உல்லாசமாக இருந்துள்ளார். பிறகு, ’இதை யாரிடமும் சொல்லக் கூடாது, நான் எப்போ தெல்லாம் கூப்பிடுகிறேனோ, அப்போதெல்லாம் வரவேண்டும்’ என்று மிரட்டியுள்ளார்.


இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர், நுன்னா போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர். போலீசார் விசாரித்து, அந்த பெண்ணை போக்ஸா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுபற்றி போலீசார் கூறும்போது, ‘போக்ஸா சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதால் அதிகமான விவரங்களை தெரிவிக்க முடியாது’ என்றனர். 

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.