கோவை மதுக்கரையை அடுத்த அரிசிப்பாளையம் பகுதியில் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஊட்டியைச் சேர்ந்தவர் ரேவதி. ஒரு மாதத்திற்கு முன் மகன் எனக் கூறி சந்தோஷ் என்ற நபருடன் சேர்ந்து அரிசி பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் விஜயராஜ் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை ரேவதி கழுத்து அறுபட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் வீட்டினுள் இறந்து கிடந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ரேவதியின் மகன் எனக் கூறிய சந்தோஷ் தலைமறைவாகியுள்ளார். அவரை தேடி வருகின்றனர்.