சாம்பார் டேஸ்டாக இல்லை என்று கணவர் திட்டியதால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்துகொண்டார்.
மேற்கு பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாஸ் (55). இவர் மனைவி நாகரத்தினம் (50). இவர்களுக்கு மிதுன் என்ற மகன் உள்ளார். சீனிவாஸுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் பக்க வாத நோய் தாக்கியது. இதையடுத்து வேலைக்கு செல்லாமல் வீட்டில்
இருக்கிறார். மிதுன் வேலைக்கு சென்றுவருகிறார். நாகரத்தினத்துக்கும் சீனிவாஸுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். தனக்கு உடல் நிலை சரியில்லாததால் சரியாக கவனிக்க மறுப்பதாக மனைவியை அவர் குற்றஞ்சாட்டி வந்துள்ளார். இந்நிலையில் மனைவி வைத்த சாம்பாரில் டேஸ்ட் இல்லை என்று சீனிவாஸ் நேற்று சொன்னாராம். இதையடுத்து இருவருக்கும் சண்டை நடந்துள்ளது. வெறுப்படைந்த
நாகரத்தினம்மாள் வீட்டுக்குள் சென்று தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி போலீசார் விசாரித்துவருகின்றனர்.
சம்பார் சண்டைக்காக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.