குற்றம்

ஒரே வீட்டில் 440 மதுபாட்டில்கள்.. அசந்து போன போலீசார்

ஒரே வீட்டில் 440 மதுபாட்டில்கள்.. அசந்து போன போலீசார்

Rasus

தருமபுரி அருகே கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்ய அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தருமபுரி நகர பகுதியில் கள்ள மார்க்கெட்டில் மதுவிற்பனை நடைபெறுவதைத் தடுக்க நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் காந்தி உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து நகர காவல் ஆய்வாளர் இரத்தினக்குமார் அறிவுறுத்தலின் பேரில், உதவி காவல் ஆய்வாளர்கள் சுந்தரமூர்த்தி, கோபி உள்ளிட்ட காவல்துறையினர் அடங்கிய குழுவினர் தருமபுரி நகரில் தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தினர்.

அப்போது தருமபுரி குப்பாண்டி தெருவில், அரசு மதுபாட்டில்கள் கள்ள மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. அங்கு நடத்தப்பட்ட சோதனையில் பச்சையப்பன்(61) என்பவர் தனது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பச்சையப்பனை கைது செய்த போலீசார், விற்பனைக்காக வைத்திருந்த பீர் பாட்டில்கள் உள்ளிட்ட 440 மதுபாட்டில்களையும் விற்பனை செய்து வைத்திருந்த பணம் ரூ.17 ஆயிரத்தையும்  பறிமுதல் செய்தனர். மேலும் ஒரே நபருக்கு மொத்தமாக 500-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை விற்பனை செய்த, சவுளூர் அரசு மதுக்கடை மேலாளர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால், இந்த வழக்கில் அரசு மதுக்கடையின் மேலாளரும்  கைது செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.