குற்றம்

இன்ஸ்டா ரீல்ஸ் போட்டதற்காக இப்படியொரு கொடூரமா? கணவனால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

webteam

சமூக வலைதளத்தில் ஆர்வமாக இருந்த மனைவியை கொலை செய்ததாக கணவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்

திருப்பூர் செல்லம் நகரைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (38). இவரது மனைவி சித்ரா (35). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், சித்ரா அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்திருக்கிறார். சமூக வலைதளமான டிக்டாக்கில் முன்பு சித்ரா ஆக்டிவாக இருந்திருக்கிறார். டிக்டாக் தடை செய்யப்பட்ட பின், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் வீடியோ பதிவிடுவதில் சித்ரா அதிக ஆர்வமாக இருந்துள்ளார்.

இதனை அமிர்தலிங்கம் கண்டித்தை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிக்டாக் மூலம் அறிமுகமான நபர்களுடன் சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்குச் சென்றதாக தெரிகிறது. இதற்கு அமர்ந்தலிங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனையும் மீறி சித்ரா சென்னைக்கு சென்று சில மாதங்கள் இருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வாரம் சித்ரா சென்னையில் இருந்து திருப்பூருக்கு திரும்பி வந்துள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது. இதையடுத்து நேற்றிரவும் தகராறு நடந்துள்ளது. இதனால் சித்ரா கோபித்துக் கொண்டு அந்த பகுதியில் உள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் மற்றும் அவர்களது மகள்கள் இருவரையும் சமாதானப்படுத்தி உள்ளனர். இதன் பின்னர் சித்ராவை வீட்டிற்கு செல்லுமாறு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே காலை நீண்ட நேரமாக அவர்களது வீட்டு கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, கழுத்தில் காயங்களுடன் சித்ரா சடலமாக கிடந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த மத்திய காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அமிர்தலிங்கத்தை விசாரணை நடத்தி வருகிறார்கள். கழுத்தில் காயம் இருப்பதால், துப்பட்டா அல்லது சேலை போன்றவற்றால் அமிர்தலிங்கம் கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இறப்புக்கான காரணம் இதுவரை உறுதியாகவில்லை என சொல்லப்படுகிறது.

ரீல்ஸ் போட்ட காரணத்துக்காக பெண்ணொருவர் தன் கணவனால் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்ற செய்தி, பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்ட