குற்றம்

சோகத்தில் முடிந்த திருமண வரவேற்பு... மாஸ்க் அணிந்துவந்து வைர மோதிரம், ரூ3 லட்சம் திருட்டு!

சோகத்தில் முடிந்த திருமண வரவேற்பு... மாஸ்க் அணிந்துவந்து வைர மோதிரம், ரூ3 லட்சம் திருட்டு!

Sinekadhara

சண்டிகர் மாநிலத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரூ.3 லட்சம் பணமும் வைர மோதிரமும் திருட்டுப் போனதால் சந்தோஷம் சோகத்தில் முடிந்துள்ளது.

புதன்கிழமை மதியம் சண்டிகரின் 22வது பகுதியில் உள்ள சன்பீம் ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். உஷா தாகூர் என்ற பெண் தனது மகளின் திருமணத்திற்காக இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறார். மேலும் மணமக்களுக்கு கொடுக்கவேண்டிய பரிசுப்பொருட்களான 3 லட்சம் ரொக்கத்தையும், ஒரு வைரமோதிரத்தையும் பர்ஸில் வைத்து தன்னுடன் எடுத்துச் சென்றிருக்கிறார். ஆனால் அந்த பர்ஸ் எப்படியோ தொலைந்து போய்விட்டது.

உறவினர்களிடம் விசாரித்துப் பார்த்திருக்கிறார். ஆனால் பர்ஸ் கிடைக்காததால் கடைசியாக போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். சிசிடிவி கேமிராவை சோதித்த போலீஸார் உறவினர்போல் வீட்டுக்குள் உலாவிய ஒரு நபர் முகமூடி அணிந்துகொண்டு பர்ஸை எடுத்துச் சென்றதை கண்டுபிடித்திருக்கின்றனர்.

மேலும் குற்றவாளியை போலீஸார் தேடிவருவதாகவும், பிரிவு 380இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கின்றனர். குற்றவாளியின் புகைப்படம் மற்றும் வீடியோவை பஸ் நிலையம் மற்றும் ரயில்நிலையங்களில் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.