செய்தியாளர்: K.கருப்பஞானியார்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக யூடியூபர் திவ்யா, கார்த்திக், ஆனந்த், சித்ரா ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சித்ரா, திவ்யா ஆகியோர் விருதுநகர் சிறையிலும், கார்த்திக் ஆனந்த் ஆகிய இருவர் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்கு பேரையும் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம், நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் விருதுநகர் எஸ்பி கண்ணன் பரிந்துரையின் பேரில், ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவின்படி திவ்யா, கார்த்திக், சித்ரா ஆகிய மூவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.