விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாதிரியார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சிவகாசி ரிசர்வ் லைன் பகுதியில் பெந்தகோஸ்து சபை பாதிரியாராக உள்ளவர் கிறிஸ்துதாஸ் (43). இவர், ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி பகுதியில் அடிக்கடி ஜெப கூட்டம் நடத்துவதற்காக வருகை தந்தபோது அங்கு வந்த பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பெண்ணின் மகளான 11 வயது சிறுமியிடம் பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தந்தை விண்ணரசு கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாதிரியார் கிறிஸ்துதாஸ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர், சிறையில் அடைத்தனர்.