திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே உள்ள பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர் முபகை காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகத்தில் சகோதரர்கள் வேல்முருகன் மற்றும் சக்திவேல் உட்பட மூன்று நபர்கள் சேர்ந்து முருகனை இரும்பு கம்பி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த முகன் அவ்விடத்திலேயே நிலைகுலைந்து சரியவே மீண்டும் அவர்மீது கல்லைத் தூக்கிப்போட்டுக் கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.
அங்கிருந்த பொதுமக்கள் தொடர்ந்து அவர்களைத் தடுக்கவே கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் வெறிகொண்டு முருகனைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். உடல் முழுக்க காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த முருகனை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளானர். அங்கு முருகனுக்கு தீஇவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்தான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து தற்போது வத்தலகுண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.