நகைகள் திருடுபோன வழக்கு - இருவர் கைது pt desk
குற்றம்

விழுப்புரம் | அரசுப் பள்ளி ஆசிரியர் வீட்டில் 31 சவரன் நகைகள் திருடுபோன வழக்கு - இருவர் கைது

அரகண்டநல்லூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டினை உடைத்து 31 சவரன் தங்க நகைகள் கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

PT WEB

செய்தியாளர்: காமராஜ்

அரகண்டநல்லூர் அருகேயுள்ள டி.தேவனூர் புதுநகர் பகுதியில் வசிப்வர் நாடராஜன். அரசுப் பள்ளி ஆசிரியரான இவரது வீட்டில் கடந்த 7ம் தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த 31 சவரன் தங்க நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து நடராஜன் அளித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அதில், பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய வேலூர் மாவட்டம் சத்துவாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (46) திருவண்ணாமலையைச் சேர்ந்த கிஷோர் (22) என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து சத்துவாச்சேரி திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த குற்றவாளிகள் இருவரையும் கைது செய்த அரகண்டநல்லூர் போலீசார், அவர்களிடமிருந்த 26 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.