குற்றம்

விழுப்புரம்: வாகன சோதனையில் சிக்கிய 600 மதுபான பாட்டில்கள் பறிமுதல்; ஒருவர் கைது

விழுப்புரம்: வாகன சோதனையில் சிக்கிய 600 மதுபான பாட்டில்கள் பறிமுதல்; ஒருவர் கைது

kaleelrahman

கண்டாச்சிபுரம் அருகே சரக்கு வாகனத்தில் நூதன முறையில் பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட 600 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட விழுப்புரம் - திருவண்ணாமலை மாவட்ட எல்லை சோதனைச்சாவடியான மழவந்தாங்கள் பகுதியில் கண்டாச்சிபுரம் போலீசார் இன்று அதிகாலை தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து காரணை பெரிச்சானூர் நோக்கி வந்த டாட்டா ஏஸ் சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்ததோடு, வாகனத்தின் மேற்கூரையில் அமைத்திருந்த அறையில் 600 மதுபாட்டில்களை அடுக்கி வைத்து, விற்பனைக்காக கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, வாகனத்தில் பயணித்த அனைவரையும் இறக்கி விட்டு, அதன் உரிமையாளரும் ஓட்டுனருமான முனியன் (47) என்பவரை கைது செய்த போலீசார், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பெங்களூருவில் இருந்து காரணை பெரிச்சானூர் கிராமத்திற்கு, ஊரடங்கில் விற்பனை செய்ய 600 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து முனியனை கைது செய்த போலீசார் 600 மது பாட்டில்களையும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.