குற்றம்

'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!

'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!

நிவேதா ஜெகராஜா

திருவள்ளூர் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த மாநில கல்லூரி மாணவர் நீதிதேவன், அதற்கு முன்னதாக சக நண்பர்களுடன் ஓடும் ரயிலில் சாகசம் செய்த வீடியோ வெளியாகி உள்ளது.

இரண்டு தினங்களுக்கு முன்னர் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியை அடுத்த ஒரத்தூர் பகுதியை சேர்ந்த நீதிதேவன் (வயது 19) என்ற மாணவர் ரயில் விபத்தொன்றில் உயிரிழந்திருந்தார். இவர் சென்னை மாநில கல்லூரியில் பொருளியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் செல்லும் புறநகர் ரயிலில் படியில் தொங்கியபடி சென்றபோது வேப்பம்பட்டு ரயில் நிலையத்திற்கும், செவ்வாப்பேட்டை நிலையத்திற்கும் இடையில் தவறி விழுந்து மாணவர் உயிரிழந்திருந்தார்.

இதில் மாணவர் முதலில் படுகாயமடைந்திருந்த நிலையில், அவரை மீட்ட பொது மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் படுகாயமடைந்த மாணவன் நீதிதேவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் ரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

<iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/TJCrRXz49Rg" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

இந்நிலையில் இறப்பதற்கு முன்பாக ரயிலில் சக நண்பர்களுடன் இணைந்து அவர் சாகசம் செய்த பழைய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ரயிலில் தொங்கியபடியும், மேற்கூரையில் அவர் ஏறுவது போன்றும் சாகசங்கள் செய்து வருவது தெரிகிறது.