குற்றம்

வேலூரில் தப்பி, பர்கூரில் பிடிபட்ட கைதி

வேலூரில் தப்பி, பர்கூரில் பிடிபட்ட கைதி

webteam

வேலூர் மத்திய சிறையில் இருந்து தப்பிச்சென்ற விசாரணை கைதியை பர்கூரில் காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த சின்னகந்திலியை சேர்ந்த சகாதேவன் என்பவர் கடந்த அக்டோபர் மாதம் மூதாட்டி ஒருவரை நகைக்காக கொலை செய்தார். இதுதொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்ட அவர், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு தான் அணிந்திருந்த வேஷ்டியை பயன்படுத்தி, வேலூர் மத்திய சிறையின் பின்பக்க சுற்று சுவரை தாண்டி அவர் தப்பியோடியுள்ளார். 

இதையடுத்து சக கைதிகளிடமும், சிறை காவலர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் தப்பியோடிய கைதியை காவல் துறையினர் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் திருப்பத்தூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான 50 பேர் கொண்ட போலீஸ் படையினர் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் பதுங்கி இருந்த கைதி சகாதேவனை மடக்கி பிடித்தனர்.