குற்றம்

வேலூர்: 14 வயது சிறுமியை திருமணம் செய்த 55 வயது முதியவர்; போக்சோவில் கைது

வேலூர்: 14 வயது சிறுமியை திருமணம் செய்த 55 வயது முதியவர்; போக்சோவில் கைது

kaleelrahman

55 வயது முதியவருக்கு 14 வயது சிறுமியை திருமணம் செய்துவைத்த தாய் மற்றும் திருமணம் செய்துகொண்ட 55 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

வேலூர் அடுத்த கருகம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழில் செய்யும் பெண் ஒருவர் தனது முதல் கணவர் இறந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவரை மறுமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார். இவருக்கு 14 வயதில் ஒரு சிறுமி உள்ளார். இந்நிலையில் தனது 14 வயது சிறுமியை தனது இரண்டாவது கணவரின் அண்ணன் லோகநாதன் (55) என்பவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து வைத்துள்ளார்.

இந்நிலையில் சிறுமி கருவுற்றதால் அதனை கலைக்க மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சமூக நலத்துறை அதிகாரிகள், இச்சம்பவம் குறித்து விருஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த விருஞ்சிபுரம் காவல் துறையினர், சிறுமியை திருமணம் செய்து வைத்த தாய் மற்றும் திருமணம் செய்துகொண்ட முதியவர் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்ததோடு சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.