குற்றம்

வேலியே பயிரை மேய்ந்தது... மணல் கடத்தி பிடிபட்ட டிராக்டரை கடத்திய ஆயுதப்படை காவலர் சஸ்பெண்ட

kaleelrahman

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளியதாக பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டரை கடத்திச் சென்றதாக ஆயுதப்படை காவலரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி இராமசாமியாபுரம் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் பெரியகுளம் கண்மாய்க்கு செல்லும் ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டு கூமாப்பட்டி காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் விதிகளைமீறி மணல்அள்ளிய ராமலிங்கத்தின் மகன் தனுஷ்கோடி என்பவர் விருதுநகர் ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். தனது குடும்பத்திற்குச் சொந்தமான டிராக்டரை காவல்துறையால் பறிமுதல் செய்தது, தனக்கு அவமானம் என கருதி இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் காவல்நிலையம் முன்பு நிறுத்தியிருந்த டிராக்டரை எடுத்துச் சென்றுள்ளார்.

இது குறித்து கூமாப்பட்டி காவல்துறையினர் விசாரணை செய்ததில், ஆயுதப்படை காவலர் தனுஷ்கோடி வந்து டிராக்டரை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஆயுதப்படை காவலர் தனுஷ்கோடி மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலை டிராக்டரை கடத்திய ஆயுதப்படை காவலர் தனுஷ்கோடியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.