குற்றம்

உ.பி: போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்த வழக்கில் பாஜக எம்எல்ஏவுக்கு 5 ஆண்டு சிறை

Veeramani

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள கோசைகஞ்ச் தொகுதி பாஜக எம்எல்ஏ இந்திர பிரதாப் திவாரி கல்லூரியில் அனுமதி பெற போலி மதிப்பெண் சான்றிதழைப் பயன்படுத்திய வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பூஜா சிங் வழங்கிய தீர்ப்பின்படி, திவாரி சிறைக்கு அனுப்பப்பட்டார். மேலும் அவருக்கு ரூ .8,000 அபராதம் விதிக்கப்பட்டது. 1992 ல் திவாரிக்கு எதிராக அயோத்தியில் உள்ள சாகேத் டிகிரி கல்லூரியின் சார்பில் ராம ஜன்மபூமி காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. எஃப்.ஐ.ஆரின் படி, பட்டப்படிப்பின் இரண்டாம் ஆண்டில் தோல்வியடைந்த திவாரி, 1990 ல் போலி மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்து அடுத்த வகுப்பில் சேர்ந்தார். இந்த வழக்கில் 13 ஆண்டுகளுக்கு பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 28 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தீர்ப்பு வந்துள்ளது.