குற்றம்

மகளை பாலியல் வன்கொடுமை செய்ய உதவிய கொடூர தந்தை

மகளை பாலியல் வன்கொடுமை செய்ய உதவிய கொடூர தந்தை

webteam

பெற்ற மகளையே நண்பர்களுக்கு பரிசாகக் கொடுத்த அப்பா, அவர்களுடன் சேர்ந்து தானும் அவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் சிதாபூர் மாவட்டத்தில் உள்ளது கம்லாபூர் பகுதி. இந்தப் பகுதியை சேர்ந்த 50 வயது அப்பா ஒருவர், தனது மகளை அழைத்துக்கொண்டு கடந்த 15-ம் தேதி கண்காட்சி ஒன்றுக்குச் சென்றார். மகள் திருமணம் முடிந்து விவாகரத்துப் பெற்றவர். கண்காட்சியில் இருக்கும்போது, அந்த அப்பா, தனது நண்பர் மான் சிங்கிற்கு போன் செய்தார். ‘எங்க இருக்க, அப்படியே கண்காட்சிக்கு வாயேன்’ என்று அழைத்தார். ’பாசக்கார நண்பன் அழைக்கிறானே என்று வந்தார் கண்காட்சிக்கு. பிறகு அங்கிருந்து வெளியே வந்தனர்.

அவர்களது இன்னொரு நண்பர் மீரஜ் என்பவர் வீட்டுக்கு ஒரே பைக்கில் செல்ல முடிவு செய்தனர். ‘ராத்திரி நேரத்துல அவர் வீட்டுக்கு எதுக்கு?’ என்று கேட்டார் மகள். ’சும்மா போயிட்டு வந்திடலாம், ஏறு’ என்று சொன்னார். அப்பா சொன்னதால் மறுக்க முடியாமல் ஏறினார் மகள். மூன்று பேரும் மீரஜ் வீட்டுக்குச் சென்றனர். அவர் வீட்டில் வேறு யாரும் இல்லை. அப்போதே மகளுக்குச் சந்தேகம். பிறகு அவர் வீட்டுக்குள் ஓர் அறைக்குள் அவளைத் தள்ளினார். பிறகு மான் சிங்கும் மீரஜும் மாறி மாறி பாலியல் வன்முறை செய்தனர். பின்னர் அப்பாவும் அவர்களுடன் சேர்ந்துகொண்டார். பின், அறைக்குள் அடைந்து வைத்து மறுநாளும் இதே போல மாறி மாறி பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து 18 மணி நேரம் அந்த நரக வேதனையை அனுபவித்த மகள், அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது தப்பி ஓடி வீட்டுக்கு வந்தார். அம்மாவிடம் கண்ணீர் விட்டு கதறிபடியே தான் சீரழிக்கப்பட்ட விஷயத்தைச் சொன்னார். கொதித்துப் போன அம்மா, மகளுடன் போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீ சார், மூவரை யும் வலைவீசி தேடினர். இதில் மீரஜ் கைது செய்யப்பட்டார். இவர்  பயிற்சி டாக்டர் என்று கூறப்படுகிறது. கொடுமைக்கார அப்பாவையும் அவர் நண்பர் மான் சிங்கையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மான் சிங் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.  

அப்பாவே பெற்ற மகளை நண்பர்களுக்கு விருந்தளித்த அதிர்ச்சி சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.